உம் ஆசை!!
என்னை மீட்க பிறந்த நல்ல
தெய்வம்,
எந்தன் பாவம் சுமந்த நல்ல
தெய்வம்,
இயேசுவே என்னையும் தூக்கியே
எடுத்தீர்!!
என் நிர்பந்தங்கள் யாவும்
நீரே சுமந்தீர்!!
பூரண சற்குணராம்!! எமை தினம்
காப்பவராம்!!
உம் அன்பாலே எமைக் காத்துக்
கொண்டீர்!!
அன்பு மட்டும் எங்கும்,
மலர வேண்டும் என்று,
உந்தன் உயிர்த் தந்தீர்,
உம் ஆசை நிறைவேறுமா??
பகைவரைக் கூடச்,
சிநேகிக்கச் சொல்லி,
கற்றுக் கொடுத்தீரே, உம்
வார்த்தை வீணாகுமா??
உம் முகம் காணும், ஏக்கங்கள்
உண்டு,
உம் குரல் கேட்க ஏங்கினேன்
இன்று,
பிறர்த் துன்பம் உணர்ந்து
கொள்ளும் வாய்ப்பினை வழங்கு - இயேசுவே
-
ஆ. லெகின்ஸ்
No comments:
Post a Comment