நின்னைச் சரணடைந்தேன்!!!
நின்னைச் சரணடைந்தேன் – இயேசுவே
நின் பாதம் தேடி வந்தேன்
காயங்கள் பல தந்த,
பாவங்கள் தான் நீங்க - நின்னைச்
சரணடைந்தேன்
பல பேய்கள் எமைச் சூழும்,
கடும் சாபங்கள் தான் தீர - நின்னைச் சரணடைந்தேன்
சுயநலம் தவிர்த்துத் தள்ளி,
பிறர் நலம் தான் பேண - நின்னைச் சரணடைந்தேன்
சிறை எடுத்தனம் துன்பங்கள் எமை,
அடியோடு அகன்றோட - நின்னைச் சரணடைந்தேன்
கடும் நோய்கள் பல நீங்கி,
சுக வாழ்வுதனை கண்டிட - நின்னைச் சரணடைந்தேன்
என் செயல் நோக்கிப் பெருமிதம் கொள்ளும்,
வகைதனைத் தள்ள - நின்னைச் சரணடைந்தேன்
தீமைகள் கொண்டானாம் பாவ நெஞ்சத்துள்,
நன்மைகள் குடி கொண்டிட - நின்னைச் சரணடைந்தேன்
வேற்றுமைகள் விதைத்தனம் எம்மில்,
அவை நீங்கி ஒற்றுமை வேரூன்ற - நின்னைச் சரணடைந்தேன்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்...
ReplyDelete