சரண்!!!
வாழ்வில்
எங்கோ சென்றிருந்தேன் – பாவ
செயல்கள்
பல புரிந்திருந்தேன்…
கண் மூடிக்
களித்திருந்தேன் – பாவ
பாரத்தால்
தவித்திருந்தேன்…….
குழப்பம்
பல கொண்டிருந்தேன் –
வாதங்கள்
செய்தும் வென்றிருந்தேன்……
வீண் பெருமை
மனதில் பூண்டிருந்தேன்……..
பேய்த் தனங்கள்
பல கொண்டாடிய
பொருட்டெனக்
கொண்டனம் இறையே!!!!
கடும் இருளினின்று
காத்தனம் எமையே!!!
நினை
ஆராதிக்கும் தருணம் நோக்கி,
காத்திருக்கும்
நோக்கமாய் எமைத் தூக்கி
நிறுத்தினம்
நின் சந்நிதியில்
சரண் புகுந்தேன்
யான் நின் பாதங்களில்……………
No comments:
Post a Comment