Saturday, January 4, 2020

Poem for Jesus - 4


நின்னைச் சரணடைந்தேன்!!!

நின்னைச்  சரணடைந்தேன்இயேசுவே
                                   நின் பாதம் தேடி வந்தேன்
காயங்கள் பல தந்த,
        பாவங்கள் தான் நீங்க - நின்னைச்  சரணடைந்தேன்
பல பேய்கள் எமைச் சூழும்,
        கடும் சாபங்கள் தான் தீர - நின்னைச்  சரணடைந்தேன்
சுயநலம் தவிர்த்துத் தள்ளி,
      பிறர் நலம் தான் பேண - நின்னைச் சரணடைந்தேன்
சிறை எடுத்தனம் துன்பங்கள் எமை,
     அடியோடு அகன்றோட - நின்னைச் சரணடைந்தேன்
கடும் நோய்கள் பல நீங்கி,
               சுக வாழ்வுதனை கண்டிட - நின்னைச் சரணடைந்தேன்
என் செயல் நோக்கிப் பெருமிதம் கொள்ளும்,
    வகைதனைத் தள்ள - நின்னைச் சரணடைந்தேன்
தீமைகள் கொண்டானாம் பாவ நெஞ்சத்துள்,
    நன்மைகள் குடி கொண்டிட - நின்னைச் சரணடைந்தேன்
வேற்றுமைகள் விதைத்தனம் எம்மில்,
 அவை நீங்கி ஒற்றுமை வேரூன்ற - நின்னைச் சரணடைந்தேன்



Sunday, December 1, 2019

Poem for Jesus 3


உம் ஆசை!!

என்னை மீட்க பிறந்த நல்ல தெய்வம்,

எந்தன் பாவம் சுமந்த நல்ல தெய்வம்,

இயேசுவே என்னையும் தூக்கியே எடுத்தீர்!!

என் நிர்பந்தங்கள் யாவும் நீரே சுமந்தீர்!!

பூரண சற்குணராம்!! எமை தினம் காப்பவராம்!!

உம் அன்பாலே எமைக் காத்துக் கொண்டீர்!!



அன்பு மட்டும் எங்கும்,

மலர வேண்டும் என்று,

உந்தன் உயிர்த் தந்தீர், உம் ஆசை நிறைவேறுமா??

பகைவரைக் கூடச்,

சிநேகிக்கச் சொல்லி,

கற்றுக் கொடுத்தீரே, உம் வார்த்தை வீணாகுமா??

உம் முகம் காணும், ஏக்கங்கள் உண்டு,

உம் குரல் கேட்க ஏங்கினேன் இன்று,

பிறர்த் துன்பம் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கு -  இயேசுவே

-      ஆ. லெகின்ஸ்

Poem for Jesus 2



சரண்!!!

வாழ்வில் எங்கோ சென்றிருந்தேன் – பாவ

செயல்கள் பல புரிந்திருந்தேன்…

கண் மூடிக் களித்திருந்தேன் – பாவ

பாரத்தால் தவித்திருந்தேன்…….

குழப்பம் பல கொண்டிருந்தேன் –

வாதங்கள் செய்தும் வென்றிருந்தேன்……

வீண் பெருமை மனதில் பூண்டிருந்தேன்……..

            பேய்த் தனங்கள் பல கொண்டாடிய

கொடும் பாவியாம் எமையும்

பொருட்டெனக் கொண்டனம் இறையே!!!!

கடும் இருளினின்று காத்தனம் எமையே!!!

நினை ஆராதிக்கும் தருணம் நோக்கி,

காத்திருக்கும் நோக்கமாய் எமைத் தூக்கி

நிறுத்தினம் நின் சந்நிதியில்

சரண் புகுந்தேன் யான் நின் பாதங்களில்……………


                                                                           - லெகின்ஸ் ஆபிரகாம்

Thursday, November 7, 2019

Poem for Jesus - 1


பரனே!!!!!!!!

வானின் மழை நீர் கயிறாயிருந்தால்,

சேர்வேனே அதிலேறி பரனே உம்மை…..

பறவையின் சிறகது எனக்குமிருந்தால்,

பறந்தேனும் பார்த்திட வருவேனே உம்மை…..

வளியின் நிறையாம் சற்றதிகமிருந்தால்

கலந்தேனுமதிலே காண்பேனே பரனை……..

--அந்தோ ஆச்சரியம்!!


குறையோடு கறைகொண்டு வாழ்ந்திடும் தீயராம்

எமை மீட்டிட வந்தனம் பரனே!!!!....

குருட்டாட்டம் போட்டனம் எமை,

குருதி களைந்து சுத்திகரித்தனம் பரனே!!!....

உமைக் காண கண் கோடி வேண்டி நிற்கும் இப்பாவியைக்

கண் பாராயோ?? – எம் பரனே…….. 

                                                        - லெகின்ஸ் ஆபிரகாம்

Poem for Jesus - 4

நின்னைச்   சரணடைந்தேன்!!! நின்னைச்   சரணடைந்தேன் – இயேசுவே                                    நின் பாதம் தேடி வந்தேன் காயங்கள்...