பரனே!!!!!!!!
வானின் மழை
நீர் கயிறாயிருந்தால்,
சேர்வேனே
அதிலேறி பரனே உம்மை…..
பறவையின்
சிறகது எனக்குமிருந்தால்,
பறந்தேனும்
பார்த்திட வருவேனே உம்மை…..
வளியின் நிறையாம்
சற்றதிகமிருந்தால்
கலந்தேனுமதிலே
காண்பேனே பரனை……..
--அந்தோ ஆச்சரியம்!!
குறையோடு
கறைகொண்டு வாழ்ந்திடும் தீயராம்
எமை மீட்டிட
வந்தனம் பரனே!!!!....
குருட்டாட்டம்
போட்டனம் எமை,
குருதி களைந்து
சுத்திகரித்தனம் பரனே!!!....
உமைக் காண
கண் கோடி வேண்டி நிற்கும் இப்பாவியைக்
கண் பாராயோ??
– எம் பரனே……..
- லெகின்ஸ் ஆபிரகாம்